எஸ்.ஐ.,கள் இடமாற்றம்

புதுச்சேரி : காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ரெட்டியார்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் சிறப்புநிலை சப் இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, பஞ்சரத்தினம், சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் அன்பரசன், போலீஸ் கான்ஸ்டபுள் விக்ரம் சுந்தர், பெண் காவலர் சூர்யா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை காவல் துறை தலைமையக எஸ்.பி., சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.

Advertisement