வித்யா மந்திர் பள்ளியில் இலக்கிய மன்ற விழா

கடலுார: கடலுார் பழைய வண்டிப்பாளையம் எஸ்.கே.,வித்யாமந்திர் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது.

பள்ளி தாளாளர் கவிதா கண்ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மோகன் முன்னிலை வகித்தார். விழாவில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களுக்கு துறை சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

பெரியார் அரசுக் கல்லுாரி தமிழ் பேராசிரியர் குமரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.

விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement