காற்றாலை உதிரிபாக துறை கோரிக்கை

புதுடில்லி:இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்திக்கான பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்கள், காற்றாலை டர்பைனுக்கு தேவையான உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை படிப்படியாக செயலாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

காற்றாலை டர்பைனுக்கு தேவையான உதிரிபாகங்களை உள்ளுரில் விரைவாக உற்பத்தி செய்வதை கட்டாயமாக்கும் அரசின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கை குறித்து தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் வினியோக தொடர்பில் தடங்கல் ஏற்படுவதுடன் கூடுதல் செலவு ஏற்படும் என கூறியுள்ளனர். சரக்கு குறியீடுக்கான வகைப்பாடு, உதிரிபாகங்களுக்கு பி.ஐ.எஸ்., தரக்குறியீடு மற்றும் ஏற்றுமதி தொடர்பான சலுகைகளை வழங்குமாறும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement