ரூ.4.80 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்

காங்கேயம், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம், முதல்வரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி என, 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று திறந்து வைத்தார்.


இதை தொடர்ந்து வெள்ளகோவில், குண்டடம் பகுதியில் நடந்த, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் பார்வையிட்டார். இந்நிகழ்வில் வீட்டு வரி ரசீது பெயர் மாற்ற ஆணை, சோளம் மற்றும் காய்கறி விதை தொகுப்பு, காய்கறி மற்றும் பழச்செடி தொகுப்பு, மருந்து பெட்டகங்களை பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார். காங்கேயம் அரசு கலை கல்லுாரி முன்புறம் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை திறந்து வைத்தார்.
நிகழ்வுகளில் காங்கேயம் தாசில்தார் மோகனன், காங்கேயம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கருணைபிரகாஷ், வெள்ளகோவில் செயலாளர் சந்திரசேகரன். குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement