தேய்பிறை அஷ்டமி காலபைரவருக்கு பூஜை
கரூர், கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிப்பாடு நடந்தது. இதில், பால்,தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர், பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
* சேமங்கியில் உள்ள மங்களநாதர் சமேத கமலாம்பிகை கோவிலில் உள்ள காலபைரவர், புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள கால பைரவர், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோவில் உள்ள காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்
-
குருபூஜை விழா
-
பழநியில் ஆடி லட்சார்ச்சனை துவக்கம்
-
இதிலும் கவனம் செலுத்துங்க : குறுகிய காலத்தில் பாழாகும் அரசு கட்டடங்கள்
-
தனியார் பள்ளி நிர்வகிப்பதில் பிரச்னை மாணவர்களுடன் ஆசிரியர்கள் தர்ணா
-
நல்லபிச்சம்பட்டி சர்ச் சப்பர பவனி
Advertisement
Advertisement