டிரைவர் கொலை: விடுதலைக்களம் கட்சி கண்டனம்
ராசிபுரம், தனியார் பள்ளி பஸ் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, விடுதலைக்களம் கட்சி நிறுவன தலைவர் நாகராஜன், கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சத்திரத்தில் தனியார் பள்ளி பஸ் டிரைவர் விஜயை, ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.
நாமக்கல் மாவட்டத்தில் சமீப காலங்களில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த சொந்தங்கள் இதுபோல அநியாயமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விஜய் உயிரிழப்புக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். அவரது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என, தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், விடுதலைக்களம் கட்சி சார்பில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும்
-
இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்
-
குருபூஜை விழா
-
பழநியில் ஆடி லட்சார்ச்சனை துவக்கம்
-
இதிலும் கவனம் செலுத்துங்க : குறுகிய காலத்தில் பாழாகும் அரசு கட்டடங்கள்
-
தனியார் பள்ளி நிர்வகிப்பதில் பிரச்னை மாணவர்களுடன் ஆசிரியர்கள் தர்ணா
-
நல்லபிச்சம்பட்டி சர்ச் சப்பர பவனி