வைத்தீஸ்வரன் கோவிலில் இ.பி.எஸ்., தரிசனம்

1

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., சுவாமி தரிசனம் செய்தார்.



மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் அதிபதியான தன்வந்திரி சித்தர்
ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.


இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்., வைத்தீஸ்வரன் கோவில் தனியார் ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில், இன்று காலை கோவிலுக்கு வந்தார்.


அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தருமபுரம் ஆதீன கட்டளை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் தலைமையில் மடத்தின் மேலாளர் அரவிந்தன், சூப்பிரண்டு ஸ்ரீதர், கோவில் சூப்பிரண்டு முத்து, கேசியர் ரமணி ஆகியோர் பூரண கும்பம் கொடுத்து வரவேற்றனர்.


தொடர்ந்து, விநாயகர், சுவாமி, அம்பாள், செல்வ முத்துக்குமாரசுவாமி சன்னதிகள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து அவருக்கு சிவாச்சாரியார்கள் 4448 நோய்களை தீர்க்கக் கூடிய திருச்சார்ந்துருண்டை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர். இ.பி.எஸ்., மகன் மிதுன். மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் சக்தி, ராதாகிருஷ்ணன், சந்திரமோகன் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

Advertisement