'தலித்' பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பாட்னா: பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். முன்னதாக, அவர் சாலையின் இருபுறங்களில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நிற்க, ரோடு ஷோ நடத்தினார்.
அரசு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, இன்று பீஹார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பீஹார் சென்ற பிரதமரை, முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர்கள் சாம்ராத் சவுத்ரி, விஜய் சின்ஹா உள்ளிட்டோர் வரவேற்றனர். திறந்த ஜீப்பில் சென்ற பிரதமருக்கு வழி நெடுகிலும் திரண்டு நின்ற பா.ஜ., தொண்டர்கள், மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில், சுமார் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பாட்னாவில் இருந்து டில்லி, மோதிஹரியில் இருந்து டில்லி, தர்பாங்காவில் இருந்து லக்னோ, மால்டா நகரில் இருந்து லக்னோவுக்கு இடையிலான அம்ரித் பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி பேசியதாவது; காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் நீண்ட காலமாக ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் பெயரால் அரசியல் செய்து வருகின்றன. சம உரிமை வழங்குவதை மறந்து விட்டார்கள். தங்களின் குடும்பத்தினரை தவிர்த்து பிற யாருக்குமே மரியாதை கூட கொடுப்பதில்லை.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காக நாங்கள் உழைக்கிறோம். அதுக்கு எங்களின் திட்டங்களே சாட்சி. ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட வகுப்பையும் முதன்மைப் படுத்துவதே எங்களின் என்.டி.ஏ., கூட்டணியின் வேலை. பீஹாரில் புறக்கணிக்கப்பட்டிருந்த பிற்பட்ட கிராமங்களை நாங்கள் மேம்படுத்தினோம். இன்று அவை நாட்டின் முன்னணிக் கிராமங்களாக உள்ளன.
பிரதான் மந்திரி தன் தான்யா க்ருஷி திட்டம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருமானம் குறைவாக உள்ள 100 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை கொடுக்கப்படும். இதன் மூலம் பீஹாரின் 1.75 கோடி விவசாயிகள் நேரடியாக பயனடைவார்கள், இவ்வாறு கூறினார்.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் பேசியதாவது;
முன்பு மின்கட்டணத்தை செலுத்துபவர்கள், அதிக பணத்தை செலவிட வேண்டியிருந்தது. 2018ல் நாங்கள் இதை எளிதாக்கினோம். இப்போது பீஹாரின் குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறோம்.
அதுமட்டுமில்லாமல்,ரூ.50,000 கோடி மதிப்பிலான 430 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2025 பிப்ரவரி பட்ஜெட்டில் மகாகனா வாரியம் அமைப்பது, விமான நிலையத்திற்கான திறப்பு மற்றும் மேற்கு கோசி நதிக்கான நிதி உதவி ஆகியவற்றுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது, எனக் கூறினார்.





மேலும்
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உலா வரும் மசூத் அசார்: கண்டறிந்த உளவுத்துறை
-
பழுதாகி பரிதவிக்கும் பிரிட்டீஷ் போர் விமானத்திற்கு ஒரு நாளைக்கு பார்க்கிங் கட்டணம் ரூ.26,261
-
கோவையில் சிறுமி பலாத்காரம்: குற்றவாளிகள் 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
3 நாட்களில் பொற்கோவிலுக்கு 6 முறை வெடிகுண்டு மிரட்டல்: இன்ஜினியர் கைது
-
ஆயுதப்படை வீரர்களுக்கு ஏகே -203 ரைபிள்கள் : உ.பி.,யில் தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதம்
-
மாம்பழம் விற்பதை போல, கூவி கூவி ஆட்களை சேர்க்கும் தி.மு.க.,: அண்ணாமலை கிண்டல்