இந்தியாவில் வசூலை அள்ளும் ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்களுக்கு இந்திய சினிமாவில் எப்போதும் வசூல் இருக்கும். அந்த வகையில் அடுத்தடுத்து வெளியான மூன்று ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் நல்ல வசூலை பெற்றுள்ளன.
தமிழ் சினிமாவில் 'டூரிஸ்ட் பேமிலி' படத்திற்குப் பிறகு 50 கோடி வசூலைக் கடந்த படங்களாக கடந்த இரண்டு மாதங்களில் எதுவுமே அமையவில்லை. இத்தனைக்கும் தமிழில் சமீபத்தில் பறந்து போ, 3BHK போன்ற நல்ல படங்கள் வந்தன. ஆனால் அவை பெரிய வசூலைக் குவிக்கவில்லை. இனி வரும் வாரங்களில் வெளியாக உள்ள படங்களில் சில முக்கிய படங்கள் வசூலைக் குவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஹிந்தியில் 'ஹவுஸ்புல் 5, சிதாரே ஜமீன் பர்' ஆகிய படங்கள் 200 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற படங்களாக அமைந்தன. தெலுங்கில் 'குபேரா, ஹிட் 3' ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்த படங்களாக இருந்தன.
இந்நிலையில் இந்தியத் திரைப்படங்களுக்கு இணையாக கடந்த இரண்டு மாதங்களில் சில ஹாலிவுட் படங்கள் நல்ல வசூலை இங்கு பெற்றுள்ளன. கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி வெளியான 'எப் 1' படம் இந்தியாவில் மட்டும் 80 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளது. அதேப்போல் ஜூலை 1ம் தேதி வெளியான 'ஜூராசிக் வேர்ல்டு - ரீ பெர்த்', படம் 100 கோடி வசூலை நெருங்கி உள்ளது. கடந்த வாரம் ஜூலை 11ல் வெளியான 'சூப்பர் மேன்' படம் அதற்குள்ளாகவே 40 கோடி வசூலை பெற்றுள்ளன.
இந்த வருடம் இதுவரையில் வெளிவந்த ஹாலிவுட் படங்களில் 'மிஷன் இம்பாசிபிள் - தி பைனல் ரெக்கனிங்' படம் 110 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.


மேலும்
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உலா வரும் மசூத் அசார்: கண்டறிந்த உளவுத்துறை
-
பழுதாகி பரிதவிக்கும் பிரிட்டீஷ் போர் விமானத்திற்கு ஒரு நாளைக்கு பார்க்கிங் கட்டணம் ரூ.26,261
-
கோவையில் சிறுமி பலாத்காரம்: குற்றவாளிகள் 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
3 நாட்களில் பொற்கோவிலுக்கு 6 முறை வெடிகுண்டு மிரட்டல்: இன்ஜினியர் கைது
-
ஆயுதப்படை வீரர்களுக்கு ஏகே -203 ரைபிள்கள் : உ.பி.,யில் தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதம்
-
மாம்பழம் விற்பதை போல, கூவி கூவி ஆட்களை சேர்க்கும் தி.மு.க.,: அண்ணாமலை கிண்டல்