சத்தீஸ்கரில் பல மணி நேரம் துப்பாக்கிச்சண்டை: நக்சல்கள் 6 பேர் சுட்டுக்கொலை!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில், நக்சலைட்டுகள் 6 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் வனப் பகுதியில் பாதுகாப்பு படையினரின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் வழக்கமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இருதரப்பினருக்கும் இடையே பல மணி நேரத்துக்கும் மேலாக துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
முடிவில் நக்சலைட்டுகள் 6 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், எஸ்.எல்.ஆர். வகை துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
தாக்குதலின் போது நக்சலைட்டுகளில் பலர், அடர் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினரின் கூட்டு நடவடிக்கை குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மேலும்
-
அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வருமானம் அதிகரிப்பு
-
புரியாத புதிரா பும்ரா, ரிஷாப் பன்ட்: மான்செஸ்டர் டெஸ்டில் 'சஸ்பென்ஸ்'
-
கித்வாய் புற்றுநோய் மருத்துவமனை ஸ்கேன் செய்ய மாற்று ஏற்பாடு
-
உலக செஸ்: இந்தியா அபாரம்
-
செஸ்: அரையிறுதியில் அர்ஜுன் * 'பிரீஸ்டைல்' தொடரில் முதன் முறையாக...
-
ரோகித் மீண்டும் சாதனை * உலக பல்கலை., விளையாட்டில்