கித்வாய் புற்றுநோய் மருத்துவமனை ஸ்கேன் செய்ய மாற்று ஏற்பாடு

பெங்களூரு: 'கித்வாய் புற்றுநோய் மருத்துவமனையில், எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங், மெமோகிராம் இயந்திரங்களில் பழுது நீக்கும் பணிகள் நடக்கின்றன. நோயாளிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:

கித்வாய் புற்றுநோய் மருத்துவமனையில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் ஸ்கேனிங் இயந்திரம், மெமோகிராம் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன.

இவற்றை பழுது நீக்கும் பணிகள் நடந்து வருகின்றன. எனவே நோயாளிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு புதிய இயந்திரங்கள் வாங்க, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போதைக்கு பழுதடைந்த இயந்திரங்களை சரி செய்யும் பணிகள் நடக்கின்றன.

இன்னும் சில நாட்களில், நோயாளிகளுக்கு ஸ்கேனிங் சேவை கிடைக்கும். அதுவரை நோயாளிகளின் நலனை கருதி, நிமான்ஸ் மற்றும் சஞ்சய் காந்தி எலும்பு மருத்துவமனைகளில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங், மெமோகிராம் ஸ்கேனிங் தேவைப்படும் நோயாளிகள், இவ்விரு மருத்துவமனைகளுக்கு சென்று ஸ்கேனிங் செய்து கொள்ளலாம்.

இது தொடர்பாக, இந்த இரண்டு மருத்துவமனைகளுடன், கித்வாய் புற்றுநோய் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement