இந்திய வீராங்கனைக்கு அபராதம்

துபாய்: போட்டியில் ஒழுங்கீனமாக நடந்த இந்திய வீராங்கனை பிரதிகா ராவலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி (262/6) 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை (258/6) வீழ்த்தியது.
இப்போட்டியில் இந்திய துவக்க வீராங்கனை பிரதிகா ராவல் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். ஆட்டத்தின் 18வது ஓவரில் ரன் எடுக்க ஓடிய போது இங்கிலாந்து பவுலர் லாரன் பைலர் மீது மோதினார். அடுத்த ஓவரில் அவுட்டாகி சென்ற போது இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோனின் தோளில் இடித்தார். ஐ.சி.சி., விதிமுறைப்படி எதிரணி வீராங்கனைகளை உடல்ரீதியாக தாக்குவது குற்றம். தனது தவறை பிரதிகா ஒப்புக் கொண்டதால், போட்டி சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக வழங்கப்பட்டது.


இப்போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறிய இங்கிலாந்து அணி வீராங்கனைகளுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து தலா 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.



@quote@

பிரதிகா மறுப்பு


இதுகுறித்து பிரதிகா ரவால் கூறுகையில், ''இங்கிலாந்து வீராங்கனைகள் மீது வேண்டுமென்றே மோதவில்லை. நான் ரன் எடுக்க ஓடிய போது எதிர்பாராதவிதமாக மோத நேரிட்டது,'' என்றார்.quote

Advertisement