நியூசிலாந்து அணி மீண்டும் வெற்றி: ஜிம்பாப்வே அணி ஏமாற்றம்

ஹராரே: கான்வே அரைசதம் விளாச, நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.

ஜிம்பாப்வேயில், முத்தரப்பு 'டி-20' தொடர் நடக்கிறது. ஹராரேயில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் 'பவுலிங்' தேர்வு செய்தார்.
ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி மாதேவெரே (36), பிரையன் பென்னட் (21) நல்ல துவக்கம் தந்தனர். கேப்டன் சிக்கந்தர் ராஜா (12), ரியான் பர்ல் (12), டோனி முன்யோங்கா (13) நிலைக்கவில்லை. ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 120 ரன் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்ரி 3 விக்கெட் சாய்த்தார்.


கான்வே அபாரம்: சுலப இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு கான்வே, ரச்சின் ரவிந்திரா ஜோடி நம்பிக்கை தந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்த போது ரச்சின் (30) அவுட்டானார். டிரேவர் குவாண்டு பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கான்வே வெற்றியை உறுதி செய்தார்.
நியூசிலாந்து அணி 13.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 122 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கான்வே (59), டேரில் மிட்செல் (26) அவுட்டாகாமல் இருந்தார்.

Advertisement