லாஸ் ஏஞ்சல்ஸில் வெடிவிபத்து: போலீசார் 3 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் (அகாடமி) ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிஸ்கைலுஸ் மைய அகாடமி பயிற்சி நிலையத்தில், வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாண்டி தெரிவித்துள்ளார். வெடிவிபத்திற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த விபத்து குறித்து, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்த இருக்கின்றனர். வெடிகுண்டு தொழில்நுட்ப வல்லுநர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் லாரா எமில்லர் தெரிவித்தார்.
"நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்" என
கவர்னர் கவின் நியூசம் தெரிவித்துள்ளார்.

மேலும்
-
பணமூட்டை விவகாரத்தில் ஆதாரம் இல்லை: சுப்ரீம் கோர்டில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு
-
மதுரை ஆதினத்துக்கு முன்ஜாமின்
-
'இக்னோ'வில் சேர ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு
-
கோவை மாநகராட்சி அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு
-
'ஆன்லைன்' தரிசன மோசடி: குருவாயூர் கோவில் எச்சரிக்கை
-
இறகுபந்து போட்டியில் குறிஞ்சி பள்ளி சாதனை