அவசர சிற்றுண்டிக்கு 'பொட்டட்டோ டிரையாங்கிள்'

வீட்டுக்கு திடீர் விருந்தாளிகள் வந்தால், அவசரத்துக்கு சிற்றுண்டி எதுவும் இருக்காது. என்ன செய்வது என, கையை பிசைவோம். அதே போன்று பள்ளி முடிந்து, வீட்டுக்கு வரும் குட்டீஸ்கள் சாப்பிட நொறுக்கு தீனி தரும்படி நச்சரிப்பர். அப்போது பிரட்டும், உருளைக்கிழங்கும் இருந்தால் சுவையான 'பொட்டட்டோ டிரை ஆங்கிள்' செய்யலாம்.
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை வேக வைக்கவும். அதன் பின் தோல் உரித்து கிண்ணத்தில் போட்டு மசித்து கொள்ளவும். பிரட்டை நீரில் நனைத்து, பிழிந்து, உருளைக்கிழங்கு மசியலில் சேர்த்து நன்றாக பிசையவும். இதில் உப்பு, மிளகாய் துாள், மிளகு துாள் போட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு இல்லாமல் பிசையவும்.
அதன்பின் அடுப்பில் தோசைக்கல் வைக்கவும். சூடானதும் ஏற்கனவே தயாரித்து வைத்த உருளைக்கிழங்கு, பிரட் மாவை உருண்டைகளாக்கி திரட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைக்கவும்.
அதன்பின் சூடாக இருக்கும் போதே, சப்பாத்தியை முக்கோண வடிவில் வெட்டினால், 'பொட்டட்டோ டிரை ஆங்கிள்' தயார். இதற்கு தக்காளி சாஸ் தொட்டுக்கொள்ள பொருத்தமாக இருக்கும்
- நமது நிருபர் -.
மேலும்
-
பணமூட்டை விவகாரத்தில் ஆதாரம் இல்லை: சுப்ரீம் கோர்டில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு
-
மதுரை ஆதினத்துக்கு முன்ஜாமின்
-
'இக்னோ'வில் சேர ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு
-
கோவை மாநகராட்சி அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு
-
'ஆன்லைன்' தரிசன மோசடி: குருவாயூர் கோவில் எச்சரிக்கை
-
இறகுபந்து போட்டியில் குறிஞ்சி பள்ளி சாதனை