''எனக்கு விரோதமான கருத்துக்களை திணிப்பு: ஆதங்கப்படுகிறார் வைகோ ;செய்தியாளர்களை தவிர்ப்பது ஏன்: வைகோ

காரைக்குடி:''எனக்கு விரோதமான கருத்துக்களை திணிக்கின்றனர். அதனால் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்க்கிறேன் ''என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

காரைக்குடியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வைகோ கூறியதாவது:

கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று அபூர்வ பொய் சொன்னவர் பழனிசாமி. அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்பதற்காக கம்யூ., கட்சியை வசை பாடுகிறார். கம்யூ., கட்சியினர் கொள்கைக்காக ரத்தம் சிந்தியவர்கள். முதல்வராக இருந்த பழனிசாமி இதுபோன்று பேசுவது அழகல்ல. ஜெ., பற்றியும், இயக்கம் பற்றியும் கம்யூ., கட்சியினர் திரும்ப பேசினால் நன்றாக இருக்காது. பஞ்சாப் தேர்தலுக்காக ஆம்ஆத்மி, இண்டியா கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. நானும் இண்டியா கூட்டணி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன்.

எனது மகன் கட்சிக்கு வருவதை முழுமையாக எதிர்த்தேன். ஆனால் கட்சி நிர்வாகிகள் ஓங்கிய குரலில் நீங்கள் என்ன சர்வாதிகாரியா என்று என்னை எதிர்த்து கேட்டனர். அதனைத் தொடர்ந்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு 99 சதவீத ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டார். இப்போது என்னை குற்றம் சாட்டும் நபர் அந்த நேரத்தில் எனக்கு ஒரு தொகுதி வேண்டும் என்று கேட்கவில்லை. தற்போது உண்மைக்கு மாறாக பேசுகிறார்.

கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுடன் சேர்ந்து கொண்டு இயக்கத்திற்கு கேடு செய்து வருகிறார். எனக்கு விரோதமான கருத்துக்களை திணிக்கின்றனர். அதனால் நான் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறேன் என்றார்.

Advertisement