' கொடை'யில் சூறைக்காற்றுடன் சாரல் மழை

கொடைக்கானல்:கொடைக்கானலில் நேற்று காலை முதல் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் சில மாதங்களாக வறண்ட வானிலை நீடித்தது. சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று காலை முதல் சூறைக்காற்று வீச மாலை வரை சாரல் மழை நீடித்தது. இதனால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. மாறுபட்ட சீதோஷ்ண நிலையால் சுற்றுலா பயணிகள் விடுதிகளில் முடங்கினர். குறைந்த அளவிலான பயணிகளை மட்டுமே சுற்றுலா தலங்களில் காண முடிந்தது. குளிரை சமாளிக்க ஸ்வெட்டர் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து பயணிகள் நடமாடினர். இந்நிலை தாண்டிக்குடி கீழ் மலை பகுதிகளிலும் நீடித்தது.

Advertisement