ராமேஸ்வரம் கோயிலில் ஆடி திருக்கல்யாண கொடியேற்றம்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றப்பட்டது.

இத்திருவிழாவையொட்டி கோயிலில் நேற்று பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்னுள்ள கொடி கம்பத்தில் குருக்கள் கொடியேற்றினார்.

இதன்பின் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. கோயில் இணை ஆணையர் செல்லதுரை, உதவி ஆணையர் ரவீந்திரன், அதிகாரிகள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, சிவக்குமார், பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஜூலை 24ல் ஆடி அமாவாசையில் அக்னி தீர்த்த கரையில் ஸ்ரீ ராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுத்தல், ஜூலை 27ல் ஆடித் தேரோட்டம் வீதி உலா, ஜூலை 29ல் ஆடி தபசில் சுவாமி அம்மனுக்கு மாலை மாற்றுதல், ஜூலை 30ல் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம், ஆக., 4ல் சுவாமி, அம்மன் பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளல் ஆகியன நடக்க உள்ளன.

Advertisement