குற்றாலத்தில் வெள்ளம்

தென்காசி,:தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயின் அருவிக்கு முன்னதாக பாலத்திலிருந்து அருவியை வேடிக்கை பார்த்துவிட்டு சென்றனர்.

Advertisement