பாம்பன் பாலத்தில் நின்ற ரயில்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து சென்னை தாம்பரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அபாய சங்கலியை பயணி ஒருவர் இழுத்ததால் பாம்பன் பாலத்தில் 10 நிமிடங்கள் நின்றது.
நேற்று மாலை 4:00 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட ரயில் 4:15 க்கு மணிக்கு பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நின்றது. இதனால் ரயிலில் பயணித்தவர்கள் நடப்பது தெரியாமல் அச்சமடைந்தனர். பின் ரயில் கார்டு ஆய்வு செய்ததில் முன் பதிவு செய்த ரயில் பெட்டியில் பயணி ஒருவர் அபாய சங்கிலியை இழுத்ததால் ரயில் நின்றது தெரிந்தது. அதை ரயில் கார்டு சரி செய்ததும் 10 நிமிடங்களுக்கு பிறகு ரயில் புறப்பட்டு சென்றது. பாம்பன் கடல் பாலத்தை காணும் ஆவலில் பயணி ஒருவர் அபாய சங்கலியை இழுத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் சங்கிலியை இழுத்த பயணியை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் யார் என ரயில்வே போலீசார் விசாரித்தனர்.