காஞ்சியில் ரத்ததான முகாம்

காஞ்சிபுரம்:இந்திய மருத்துவ சங்கம், காஞ்சிபுரம் கிளை, தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் காஞ்சிபுரம், இறைத்துளிகள் இயக்கம் சார்பில், ரத்ததான முகாம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் நடந்த இம்முகாமிற்கு, இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை தலைவர் மருத்துவர் ரவி தலைமை தாங்கினார்.
சங்க செயலர் மருத்துவர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். இதில், மருத்துவர்கள், ஹரீஷ்குமார், முத்துகுமரன், மருத்துவ பிரதிநிதிகள் சேமராஜ், தணிகையரசு உள்ளிட்ட 33 பேர் ரத்ததானம் செய்தனர்.
ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மருத்துவர் கல்பனா தலைமையிலான செவிலியர் குழுவினர் ரத்ததானம் வழங்கியோருக்கு முதற்கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
ரத்ததானம் செய்தவர்களுக்கு, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பேரீச்சம்பழம் பாக்கெட் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மருத்துவ சங்க முன்னாள் தலைவர்கள் மருத்துவர்கள் மனோகரன், விக்டோரியா, பூபதி, சரவணன் மற்றும் மருத்துவ பிரதிநிதிகள் சங்க செயலர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.