பாய்மர படகு போட்டி

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமிழக வெற்றிக் கழகம் திருவாடானை தெற்கு ஒன்றியம் சார்பில் பாய்மர படகு போட்டி நடந்தது.

கட்சி தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த இப்போட்டியில் 24 பாய்மர படகுகள் பங்கேற்றன. படகு ஒன்றுக்கு 6 பேர் வீதம் செல்ல அனுமதிக்கப்பட்டது. 5 நாட்டிக்கல் மைல் தொலைவு என எல்லை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வாணவெடி சத்தத்துடன் போட்டி துவங்கியது.

காற்றின் வேகத்திற்கு தகுந்தவாறு படகுகளை வீரர்கள் செலுத்தி ஒன்றை ஒன்று முந்தி சென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

Advertisement