கோவிலம்பாக்கம் ரேடியல் சாலையில் நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம்

கோவிலம்பாக்கம்: பல்லாவரம்- - துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில், பள்ளிக்கரணை மேம்பாலம் முதல் கோவிலம்பாக்கம் விடுதலை நகர் சிக்னல் வரை, தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும் கால தாமதத்தால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

இதையடுத்து, தாம்பரம் மாநகர கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி ஆலோசனையின் படி, போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்தனர். அதன்படி, இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கோவிலம்பாக்கம் - எஸ்.கொளத்துார் பிரதான சாலை, விடுதலை நகர் சாலை இணையும் ரேடியல் சாலையில் இருந்த சிக்னல் நீக்கப்பட்டு, தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது.

பின், அந்த இடத்தில் இருந்து ஈச்சங்காடு நோக்கி செல்லும் மார்க்கத்தில், ஜே.டி., திருமண மண்டபம், நாராயணபுரம் ஏரிக்கரை அருகே என, இரு யு - டர்ன் அமைக்கப்பட்டு உள்ளது.

இதில், கோவிலம்பாக்கம், விடுதலை நகர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள், இடதுபுறம் திரும்பி, ஈச்சாங்காடு நோக்கி சென்று, ஜே.டி., மகால் அருகே யு -- டர்ன் எடுத்து, மடிப்பாக்கம், வேளச்சேரி, துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு செல்லலாம். பல்லாவரம், குரோம்பேட்டை செல்வோர் நேராக செல்லலாம்.



@twitter@https://x.com/dinamalarweb/status/1947111318663909718twitterபல்லாவரம், குரோம்பேட்டை, கீழ்க்கட்டளை, ஈச்சங்காடு, மடிப்பாக்கம் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வருவோர், கோவிலம்பாக்கம் - எஸ்.கொளத்துார் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து செல்வோர், நாராயணபுரம் ஏரிக்கரை அருகே, யு - -டர்ன் எடுத்து செல்லலாம். வேளச்சேரி, துரைப்பாக்கம் செல்வோர் நேராக செல்லலாம்.

ரேடியல் சாலையில் இரு இடங்களில் புதிதாக செய்யப்பட்டுள்ள இப்போக்குவரத்து மாற்றத்திற்கு, வாகன ஓட்டிகள் ஒத்துழைத்து பயன்பெறுமாறு, வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement