கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தலாம் என அறிவிப்பு

சென்னை:ஒப்பந்த காலம் முடிந்ததால், கட்டணம் செலுத்தாமல் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம் என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து, மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணியை, தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்தினர் மேற்கொண்டு வந்தனர்.

இவர்களுக்கு வழங்கிய ஒப்பந்தம், நேற்றுடன் முடிவடைந்தது. மறு ஒப்பந்தம் விடும் வரை, வாகன நிறுத்தும் இடங்களில் எந்தவிட கட்டணமும் செலுத்தாமல், வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். இடையூறு ஏற்படுத்தினால், '1913' என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement