பெண்ணிடம் பணம் பறிப்பு முன்னாள் காதலன் கைது

திருவான்மியூர்:வேளச்சேரியைச் சேர்ந்தவர் விஷ்ணு, 25. இவர், போரூரை சேர்ந்த, 24 வயது பெண்ணை, 2023ம் ஆண்டு கல்லுாரி படித்த போது காதலித்துள்ளார்.
அப்போது, திருவான்மியூரில் ஒரு லாட்ஜில் இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது, அப்பெண் நிர்வாணமாக இருந்தபோது, அவருக்கு தெரியாமல் விஷ்ணு வீடியோ எடுத்துள்ளார்.
அதன்பின், தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பணம் தர மறுக்கவே, வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால், கடந்தாண்டு மே மாதம் விஷ்ணுவிடம் பழகுவதை நிறுத்தினார். தொடர்ந்து வீடியோவை காட்டி மிரட்டியதால், திருவான்மியூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
நேற்று வழக்கு பதிவு செய்த போலீசார், விஷ்ணுவை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement