பைனான்ஸ்சியரிடம் ரூ.50,000 'அபேஸ்'

பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் காளி-முத்து, 58. பைனான்ஸ் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை வாசிக்கவுண்டனுார், கதிரிபுரம் கிராமங்களில் பணம் வசூல் செய்து கொண்டு, டூவீலரில் திரும்பினார்.

கவர மலை வனப்பகுதியில் டூவீலரை நிறுத்தி விட்டு உணவு சாப்பிட்டார். அப்போது, முகமூடி அணிந்து வந்த மர்மநபர், காளிமுத்து தன் பையில் வைத்திருந்த, 50,000 ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பி-யோடினார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement