மாதர் சங்க ஒன்றிய குழு மாநாடு

பென்னாகரம்: அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க, பென்னாகரம் ஒன்றியக்-குழுவின், 5வது மாநாடு கூத்தப்பாடி திரவுபதி அம்மன் கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது.

ஜோதி தலைமை வகித்தார். சங்க மாவட்ட தலைவர் ஜெயா பேசினார். மாநாட்டில், பேரூராட்சி பகுதிகளில், 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பென்னாகரம் வட்டாரத்தில் அரசு மகளிர் கல்லுாரி தொடங்க வேண்டும். ரேஷன் கடைகளில் கைரேகை வைக்கும் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், என்பன உள்-ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement