முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக நாமக்கல் மாவட்ட தலைவர் தேர்வு

நாமக்கல்: தமிழகத்தில், 14,000 முதுநிலை ஆசிரியர்களை உறுப்பினர்களாக கொண்டு, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் செயல்படுகிறது. இந்த அமைப்பிற்கு, மாவட்ட, மாநில நிர்வாகிகள், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி, நாமக்கல் மாவட்ட அமைப்பின் தலைவராக காளிதாஸ் என்பவர், கடந்தாண்டு தேர்வு செய்யப்பட்டார். அவர், தற்போது நடந்த கவுன்சிலிங்கில், தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றார்.



இதையடுத்து, புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்காக, அமைப்பின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. அதில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், நாமக்கல் மாவட்ட தலைவராக எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுநிலை தமிழாசிரியர் செந்தில்குமார் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, சிதம்பரத்தில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில், மாநில தலைவர் மணிவாசகன் ஒப்புதலோடு, செந்தில்குமார், நாமக்கல் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றார். அதேபோல், புதிய பொருளாளராக வளையப்பட்டி முதுநிலை தமிழாசிரியர் அன்புராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

மாநில துணை தலைவர் ஜெகதீசன், மாநில மகளிர் அணி இணை அமைப்பாளர் மாதேஸ்வரி, மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர், புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement