33 வகையான 224 நாய்கள் கண்காட்சியில் பங்கேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே நடந்து வந்த, 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு நாளான நேற்று, நாய்கள் கண்காட்சி நடந்தது. இதில், லேபர், ராட்வீலர், கோல்டன் ரெப-ரிவர், சிப்பிபாறை, கோம்பை உள்ளிட்ட, 33 வகையான, 224 நாய்கள் பங்கேற்றன. இதில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்-திற்கு, வெளிநாட்டு இனங்களில் கிரேடன் வகை நாய் உரிமை-யாளர் மணிராஜ், நாட்டு நாய் இனங்களில் புல்லி குட்டா இன நாயின் உரிமையாளர் மனோஜ்குமார், வெளிநாட்டு இனங்களில் சிறிய இன நாய் வகைகளில், கோல்டன் ரெட்ரீவர் இன நாய்


உரிமையாளர் சதீஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுாரி பேராசிரியர், தலைவர் இசக்கியல் நெப்போலியன், கால்நடை பராமரிப்புத்துறை மண்-டல இணை இயக்குனர் இளவரசன், துணை இயக்குனர் ராமகி-ருஷ்ணன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு இன்று (ஜூலை 21) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை, கலெக்டர் தினேஷ்குமார் வழங்க உள்ளார். முன்-னதாக போட்டியில் பங்கேற்ற நாய்களுக்கு தடுப்பூசிகள் போடப்-பட்டன. நாய் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வை-யிட்டனர்.

Advertisement