கோகுலநாத இந்து மகாஜன பள்ளி நுாற்றாண்டு விழா கொண்டாட்டம்
சேலம்: சேலம், பிரட்ஸ் ரோட்டில் உள்ள, கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா, மாநகராட்சி தொங்கும் பூங்கா
திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. நுாற்றாண்டு விழா குழு தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர்
ராஜேந்திரன், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
பள்ளி தாளாளர் ரகுநாதன் பேசியதாவது:ஸ்ரீமான் சி.ஆர்.வீரராகவச்சாரியாரால், 100 ஆண்டுக்கு முன், 1925ல் செவ்வாய்ப்பேட்டையில் ஒரு மரக்
கிடங்கில், 4 மாணவர்களுடன் ஆரம்ப பள்ளியாக தொடங்கப்பட்-டது. 1928ல் நடுநிலை, 1945ல் உயர்நிலை, 1978ல் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்ந்து, தற்போது, 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். சேலத்தில், 100 ஆண்டு பழமை-யான பள்ளிகளில் இன்று வரை கட்டணமின்றி இலவச கல்வி அளிக்கும் அரசு உதவி பெறும் பள்ளி இது மட்டும் தான். பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள், நன்கொடையாளர்கள் தான் முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழா மலரை, அமைச்சர்
ராஜேந்திரன் வெளியிட, கலெக்டர் பிருந்தாதேவி பெற்றுக்-கொண்டார். தொடர்ந்து சாதனை புரிந்த முன்னாள் மாணவர்கள், பொதுத்தேர்வுகள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாண-வர்களுக்கு, அமைச்சர் பரிசு வழங்கினார்.
மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி, மாவட்ட கல்வி அலுவலர் நர-சிம்மன்(இடைநிலை), கவுன்சிலர் கிரிஜா, பள்ளி நிர்வாக குழு தலைவர் விஸ்வநாதன், தலைமை ஆசிரியர் நஞ்சைய்யா உள்-ளிட்ட ஆசிரியர்கள், முன்னாள், இன்னாள் மாணவர்கள் பங்கேற்-றனர்.
மேலும்
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு