ரயிலில் அடிபட்டு முதியவர் இறப்பு
வாழப்பாடி: வாழப்பாடி, மத்துாரில் உள்ள புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, நேற்று மதியம், 3:00 மணிக்கு, 60 வயது மதிக்கத்தக்க முதியவர், பெங்களூருவில் இருந்து காரைக்கால் செல்லும் பய-ணியர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதை அறிந்து, வாழப்பாடி போலீசார், அங்கு சென்று விசாரித்தனர். தொடர்ந்து சேலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, அவர் விபரம் குறித்து விசாரிக்கின்றனர்.
வலிப்பால் தொழிலாளி பலிஆத்துார்: திருச்சி, வாழவந்தான் கோட்டையை சேர்ந்தவர் அலெக்சாண்டர் பிரபாகரன், 50. இவர் சில நாட்களுக்கு முன், சேலம் மாவட்டம் ஆத்துாரில் உள்ள ஸ்வீட், ஓட்டல் கடைக்கு, வேலைக்கு வந்தார். அந்த ஓட்டலுக்கு சொந்தமான, ஆத்துார், தெற்குகாட்டில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். நேற்று வலிப்பு ஏற்பட்டதால் மயக்கம் அடைந்தார். அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் உயிரிழந்தார்.
மேலும்
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு