புல் நறுக்கும் கருவிகள் மானியத்தில் பெற அழைப்பு

சேலம், : மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு மின்சாரம் மூலம் இயங்கும், 210 புல் நறுக்கும் கருவிகள், 50 சதவீத மானி-யத்தில் வழங்கப்படுகின்றன.

குறைந்தபட்சம், 2 பசு மாடுகள், கால் ஏக்கரில் பசுந்தீவனம் பயிரிடவும், மின் வசதியும் இருக்க வேண்டும். 10 ஆண்டுக்கு முன், மானியத்தில் இக்கருவியை பெற்றவர், மீண்டும் விண்ணப்பிக்க கூடாது. பயனடைய விரும்பும் பயனாளிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயி, மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகவலுக்கு கிராமம் அருகே உள்ள கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவரை அணுகி, திட்ட விளக்க உரைகளை பெற்று, உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement