பைக் மீது லாரி மோதி தொழிலாளி சாவு

சேலம்: சேலம், குகை, அருணாசலம் தெருவை சேர்ந்த ராஜா மகன் ராஜ-குரு, 21. தங்க பட்டறை தொழிலாளியான இவர், நேற்று மாலை, 5:00 மணிக்கு, 'யமஹா பேஷன்' பைக்கில், கொண்ட-லாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலம் நோக்கி சென்று கொண்டி-ருந்தார்.


அப்போது எதிரே வந்த லாரி மோதியதில், பலத்த அடிபட்டு, ராஜகுரு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement