தண்ணீரென நினைத்து பூச்சி மருந்து குடித்த போட்டோகிராபர் பலி

சேலம்: சேலம், அம்மாபேட்டை, மாருதி நகரை சேர்ந்த, போட்டோகி-ராபர் ஜான்பாஷா, 55. இவரது வீட்டில் பூச்செடிகளை வளர்த்தார்.


அந்த செடிகளுக்கு மருந்து தெளிக்க, குடும்பத்தினர் பூச்சி மருந்தை, தண்ணீரில் கலந்து வைத்திருந்தனர். அதை, கடந்த, 15 அன்று, ஜான்பாஷா, தண்ணீர் என நினைத்து குடித்துவிட்டார். மயக்கம் அடைந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.ஆனால் நேற்று காலை அவர் உயிரிழந்தார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement