தபால்துறை ஓய்வூதியர் பேரவை கூட்டம்

ஈரோடு: அகில இந்திய அஞ்சல், ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க ஈரோடு கோட்ட கிளையின் ஆண்டு பேரவை கூட்டம் நேற்று ஈரோட்டில் நடந்தது. கோட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

கோட்ட சங்க புரவலர் நல்லதம்பி முன்னிலை வகித்தார். அகில இந்திய ரயில்வே ஓய்வூதியர்கள் சங்க தலைவர் ராகவேந்திரன் சிறப்புரையாற்றினார். அகில இந்திய பி.எஸ்.என்.எல். டி.ஓ.டி., ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி சிறப்புரையாற்-றினார். பென்சன் சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாதாந்-திர மருத்துவ படியை, ௩,௦௦௦ ரூபாயாக உயர்த்த வேண்டும் என்-பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

Advertisement