வைராபாளையத்தில் சாக்கடையாக மாறிய காவிரி பிளாஸ்டிக் கழிவுகளும் தேங்கி கடும் துர்நாற்றம்

ஈரோடு: ஈரோட்டில் பழமை வாய்ந்த ஓடையான பிச்சைக்கரான் ஓடை, மாநகரின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த ஓடை கழிவுநீர் கால்வா-யாக மாறி பல காலமாகி விட்டது. ஓடை வழியாக அடித்து வரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு, வைராபாளையம் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் தேங்கி தற்-போது குட்டை போல் காட்சியளிக்கின்றன. இதனால் துர்நாற்றம்
வீசுகிறது.


இதேபோல் சாயக்கழிவுநீரும் அவ்வப்போது பிச்சைக்காரன் ஓடை வழியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் வைராபா-ளையத்தில் காவிரி ஆறு சாக்கடையாகவே மாறி விட்டது.

Advertisement