ஆக., முதல் வாரத்தில் எல்.பி.பி.,யில் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை முடிவு

ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டி அதாவது ஆக., முதல் வாரத்திலேயே தண்ணீர் திறக்க, நீர்வளத்துறையினர் முடிவு செய்-துள்ளனர்.


கீழ்பவானி அணை (பவானிசாகர்) நீரை ஆதாரமாக கொண்டு ஆண்டுதோறும் கீழ்பவானி வாய்க்கால் (எல்.பி.பி.,) மூலம், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில், ௨.௦௮ லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இதுதவிர வாய்க்கால் கசிவு நீரை பயன்ப-டுத்தி பல ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இதில் ஒன்று, இரண்டு என இரு மண்டலங்களாக பிரித்து விவசா-யத்துக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. வழக்கமாக ஆக.,16ல் எல்.பி.பி., பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டு அணையில் போதிய நீர் இருப்பு இருப்பதால் உடன-டியாக விவசாயத்துக்கு தண்ணீரை திறக்க விவசாயிகள் கோரிக்-கைவிடுத்து வருகின்றனர். இதனால் ஆக., முதல் வாரத்திலேயே தண்ணீர் திறக்கப்படலாம் என
தெரிகிறது.
இதுகுறித்து நீர்வளத்துறை அலுவலர்கள் கூறியதாவது:
தற்போதைய நிலையில் பவானிசாகர் அணையில் போதிய நீர் இருப்பில் உள்ளது. எனவே ஆக.,முதல் வாரத்தில் திறக்க உத்தே-சித்துள்ளோம். எல்.பி.பி., வாய்க்காலில் மேற்கொண்டுள்ள
பணிகள் அனைத்தும், 10 நாட்களுக்குள் நிறைவு பெற்று விடும். இவ்வாறு கூறினர்.

Advertisement