மீன் வாங்க ஆர்வம்

ஈரோடு: ஈரோட்டில் ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட், கருங்கல்பாளையம் காவிரி சாலை மீன் மார்க்கெட்டில், மீன் விற்பனை நேற்று களை கட்டியது. கடந்த வாரம் எட்டு டன் வரை வரத்தானது.

ஆனால் ஐந்து டன் மீன்கள் வந்தது. வரத்து குறைந்தாலும் கடந்த வார விலையே நீடித்தது. விலையில் ஏற்றம் இல்லை. மீன்கள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): வெள்ளை வாவல்-900, தேங்காய் பாறை-600, ஊளி-400, சங்கரா-450, மத்தி-350, நண்டு-200, சீலா-800, இறால்-550, முரல்-500, திருக்கை-450, பாறை-180, நெய் மீன்-150, ஜிலேபி-150 ரூபாய்க்கு விற்றது.

Advertisement