குட்காவுடன் லாரியில் வந்த பெண் கைது

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த கோம்பு பள்ளம் பகுதியில், சத்தி போலீசார் வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

அப்-போது வந்த ஒரு லாரியை சோதனை செய்ததில் ஒரு பெண்ணும் இருந்தார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், ௧௪ கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. விசாரணையில் டி.என்.பாளையம், கொங்கர்பாளையத்தை சேர்ந்த பாப்பா, 42, என்பதும், விற்பனைக்காக கர்நாடக மாநில பகுதியில் இருந்து வாங்கி வந்ததும் தெரிந்தது. குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

Advertisement