போதை பொருள் தீமை விழிப்புணர்வு பேரணி

பெருந்துறை: பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலம் பாரதி இண்டர்நே-ஷனல் பள்ளி சார்பில், போதை பொருளின் தீமை குறித்து விழிப்-புணர்வு பேரணி நடந்தது.


பள்ளி தலைவர் உமாதேவி தலைமை வகித்தார். முதல்வர் ரீனா உமாசங்கர் வரவேற்றார். பள்ளி தாளாளர் செந்தில்குமார் பேர-ணியை துவக்கி வைத்தார். விஜயமங்கலம் மாரியம்மன் கோவில் அருகில் துவங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஈஸ்வரன் கோவில் அருகில் நிறைவடைந்தது. பேரணியில் பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு முழக்கங்களை முழங்கியும், விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் சென்றனர். நாடகம் மற்றும் நடனம் மூலமும் விழிப்புணர்வு
ஏற்படுத்தினர்.

Advertisement