ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை

விழுப்புரம் : ஆடி கிருத்திகையை யொட்டி, விழுப்புரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

விழுப்புரம் அரசு மருத்துவமனை வீதியில் உள்ள இக்கோவிலில் நேற்று, காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 7:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையோடு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கண்டாச்சிபுரம்



கண்டாச்சிபுரம் சக்திவேல் முருகன் கோவிலில் நேற்று காலை 9:00 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement