தொலைதுார மருத்துவ மையம் துவக்க விழா

புதுச்சேரி, ஜூலை 21-

முட்ராம்பட்டு சத்யா கிராம மறுவாழ்வு மையத்தில் தொலைதுார மருத்துவ மையம் துவக்க விழா நடந்தது.

புதுச்சேரி சத்யா சிறப்புப் பள்ளியும், அரியூர் வெங்கடேஸ்வராமருத்துவக் கல்லுாரி மருத்துவமனையும் இணைந்து கிராமப் பகுதி மக்கள் எளிதில் மருத்துவ சேவை பெறும் வகையில், திருக்கனுார் அடுத்த முட்ராம்பட்டு, சத்யா கிராம மறுவாழ்வு மையத்தில் தொலைதுார மருத்துவ மையம் அமைத்து அதன் துவக்க விழா நடந்தது.

விழாவிற்கு அரியூர் வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி மையத்தை திறந்து வைத்தார். விஜயாசந்திரசேகரன் வரவேற்றார். சத்யா சிறப்பு பள்ளியின் இயக்குனர் சித்ராஷா நோக்கவுரையாற்றினார்.

டாக்டர்கள் மகோதேவன், பரதலட்சுமி, ஆர்த்தி, ஆரோக்கியயாதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.டாக்டர் உமா சங்கர் மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவர்கள் தொலைதுார மருத்துவம் குறித்து விளக்கமளித்தனர்.

சத்யா சிறப்புப் பள்ளியின் முதன்மை செயல் அலுவலர் முனுசாமி நன்றி கூறினார்.

Advertisement