மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அடுத்த பள்ளித்தென்னல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி, பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கவிதை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

விழாவிற்கு, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் வைத்தியநாதன் வரவேற்றார்.

பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கோவிந்தம்மாள், தலைமையாசிரியர் வைத்தியநாதன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

ஆன்லைன் வானொலி கல்வியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தனம்சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். கணித பட்டதாரி ஆசிரியர் ராஜகுமாரி நன்றி கூறினார்.

Advertisement