இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே சிவநாதபு-ரத்தில் அரசுக்கு சொந்தமான ஒன்-றரை ஏக்கர் நிலத்தில், பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க, 30 ஆண்டுகளாக இந்-திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுவரை நடவடிக்கை இல்லை. இந்நிலையில் கோரிக்கையை வலி-யுறுத்தி, சிவநாதபுரத்தில் சாலையில் நேற்று கபடி போட்டி நடத்த முடிவு செய்தனர். அனுமதி கிடைக்காததால் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் திருப்பூர் மாவட்ட தலைவர் அருள் மற்றும் சங்க நிர்வாகிகள் தினேஷ் ராம், ஜீவானந்தம், லோகேஸ்வரன் உட்-பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement