திருக்குறள் கூறும் நிகழ்வு

புதுச்சேரி : புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, திருக்குறள் கூறும் நிகழ்வு நடந்தது.

நிகழ்விற்கு, தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் மோகன்தாசு வரவேற்றார்.சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, திருக்குறள் கூறும் நிகழ்வினை துவங்கி வைத்தார்.

தொடர்ந்து, பங்கேற்ற பொதுமக்கள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது,

இதில், தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் ஆதிகேசவன், பொருளாளர் அருள்செல்வம், துணைச் செயலர் தினகரன், பாலசுப்பிரமணியன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், ராஜா, சுரேஷ்குமார், பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement