புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் முதல்வர் ரங்கசாமி பளீச்

புதுச்சேரி : புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர். காங்., தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

என்.ஆர்.காங்., இளைஞர் இணைய வழி மூலம் உறுப்பினர்கள் சேர்க்கை துவக்க நிகழ்ச்சியினை துவக்கி வைத்து, முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

லோக்சபா தேர்தலில் நம் கூட்டணி வேட்பாளர் தோல்வி அடைந்தது உண்மைதான்.

சட்டசபை தேர்தல் வேறு, லோக்சபா தேர்தல் வேறு. ஆனால் வரும் சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., தலைமையில் ஆட்சி அமையும். தற்போது என்.ஆர்.காங்., தலைமையிலான ஆட்சி செயல்படுத்திய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். புதுச்சேரியின் வளர்ச்சிதான் முக்கியம். இதற்காகதான் எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்று பாரபட்சம் பார்க்காமல் அனைத்துத் தொகுதிகளுக்கும் நிதியை ஒதுக்கிக் கொடுத்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதை எதிர்க்கட்சிகள் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் எதாவது குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஊழல் என்றெல்லாம் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் உரிய நேரத்தில் கண்டிப்பாக பதில் அளிப்போம்.புதுச்சேரியில் தேர்தெடுக்கபட்ட அரசைவிட, கவர்னருக்குதான் அதிக அதிகாரம் இருக்கிறது.

இதுதான் உண்மை. அதனால்தான் மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த மாநில அந்தஸ்து கேட்கிறோம். தொடர்ந்து இதை வலியுறுத்துவோம் என்றார்.

Advertisement