சிவசுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு

கடலுார் : ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணியர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கடலுார், புதுவண்டிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்ரமணியர் கோவிலில் ஆடி மாத கிருத்திகையொட்டி மகா மண்டபத்தில் சிறப்பு யாகம், பூஜைகள் நடந்தன. இதனைதொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட 27 அபிஷேக பொருள்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேப் போன்று, திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர், புதுப்பாளையம் சுப்ரமணியர் உட்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement