மீண்டும் முன்பதிவு மையம் ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

மந்தாரக்குப்பம் : நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு மையம் மீண்டும் அமைக்க வேண்டுமென, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்தில் ஏராளமான வெளி மாநிலத்தினர் பணிபுரிகின்றனர். குறிப்பாக, வட மாநிலம் மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். பண்டிகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம்.

இவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் பஸ் போக்குவரத்து மட்டுமின்றி ரயில் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் ரயில் முன்பதிவு மையம் இயங்கிய போது, பயணிகளுக்கு புக்கிங் செய்ய வசதியாக இருந்தது.

இதற்கிடையே, ரயில்வே கணினி முன்பதிவு மையம் மூடப்பட்டது. இதன் காரணமாக ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்வதற்கு விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டியுள்ளது.

மேலும் தனியார் கணினி மையங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி புக்கிங் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, ரயில் முன்பதிவு சேவை மையத்தை மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement