ரவுடி சிவகுமார் கொலையில் தலைமறைவான எம்.எல்.ஏ., ஆதரவாளர் மீது 16 வழக்குகள்
பாரதிநகர் : ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும், எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் ஆதரவாளர் ஜெகதீஷ் மீது 16 வழக்குகள் உள்ள நிலையில், அவரது பெயர் ரவுடி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு பாரதிநகரை சேர்ந்த ரவுடி சிவகுமார், 44, கடந்த 15ம் தேதி கொலை செய்யப்பட்டார். கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், அவரது தீவிர ஆதரவாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவானது.
இவ்வழக்கில் 5 பேர் கைதாகி இருக்கும் நிலையில், பைரதி பசவராஜும் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். வழக்கின் முதல் குற்றவாளியான ஜெகதீஷ் தலைமறைவாக உள்ளார். அவர் தமிழகத்தில் இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், அங்கு சென்று தனிப்படை போலீசார் தேடுகின்றனர்.
இந்நிலையில் ஜெகதீஷ் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1999ம் ஆண்டு முதல் அவர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்து உள்ளார். கொலை, ஆள்கடத்தல், கொலை முயற்சி என அவர் மீது 16 வழக்குகள் உள்ளன. ஹென்னுார் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலிலும் ஜெகதீஷ் பெயர் இருந்தது. ஆனால் கடந்த 2022ல் ரவுடி பட்டியலில் இருந்து, அவரது பெயர் நீக்கப்பட்டது.
பைரதி பசவராஜ் அந்த நேரத்தில் அமைச்சராக இருந்ததால், அவர் கொடுத்த அழுத்தத்தால், ஜெகதீஷ் பெயர் ரவுடி பட்டியலில் இருந்து கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் பெயரை, போலீசார் எப்படி ரவுடி பட்டியலில் இருந்து நீக்கினர் என்ற கேள்வி எழுந்து, புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மேலும்
-
மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
-
'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை
-
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் நிலச்சரிவு; தமிழர் உள்பட 2 பேர் பலி
-
இன்ஸ்பெக்டர் மீதான புகார்: விசாரணைக்கு டி.ஜி.பி., உத்தரவு
-
துாய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகம் பின்னடைவுக்கு கண்டனம்