கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, கருமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 56; விவசாயி. இவர், நேற்று மாலை, ஆடுகளுக்கு இலை தழைகளை பறிக்க, அவரது விவசாய கிணற்றின் அருகே சென்றுள்ளார்.


அப்போது, கால் தடுக்கி கிணற்றுக்குள் இருந்த பாம்பேரி மீது விழுந்து கிணற்றுக்குள் விழுந்ததால் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, மல்லசமுத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இவருக்கு, ஜெயராணி, 47, என்ற மனைவியும், அஜய்குமார், 26, என்ற மகனும் உள்ளனர்.

Advertisement